;
Athirady Tamil News

மூதாட்டிக்கு பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 20 பவுன் நகைகள்- பணம் திருட்டு..!!

0

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருடைய மனைவி ராமாயி(வயது 60). இவருடைய வீட்டில் கரூரை சேர்ந்த சாந்தி வீட்டு வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் வேலை பார்த்து கொண்டு இருந்த சாந்தியிடம், ராமாயி குடிப்பதற்கு பழச்சாறு கேட்டார். உடனே அவர் பழத்தை சாறு பிழிந்து ராமாயியிடம் கொடுத்தார். அதனை வாங்கி குடித்த சிறிதுநேரத்தில் ராமாயி மயக்கம் அடைந்தார்.

இதையடுத்து சாந்தி வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டார்.

சிறிதுநேரத்தில் கண்விழித்து எழுந்த ராமாயி பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததையும், நகைகள் மற்றும் பணம் திருட்டு போய் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சாந்தியை தேடினார். அப்போது அவர் நகைகள் மற்றும் பணத்துடன் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சாந்தி பழச்சாறில் மயக்க மருந்து கலந்து ராமாயிக்கு கொடுத்துவிட்டு, நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுபற்றி ராமாயி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சாந்தியை தேடி வருகிறார்கள். சாந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ராமாயி வீட்டில் வேலைக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 20 =

*