;
Athirady Tamil News

வவுனியாவில் உள்ளூராட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள்…!! (படங்கள்)

0

உள்ளூராட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் வவுனியாவில் அமைதியான முறையில் நடைபெறுகிறது.

நாடு பூராகவும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் முதலாம் கட்டம் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் இன்றும், நாளையும் நடைபெற்று வருகின்றது.

இரண்டாம் கட்ட வாக்குப் தபால் மூல பதிவில அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் வவுனியாவிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவுகள் பிரதேச செயலகங்கள், கல்வித் திணைக்களங்கள் என்பவற்றில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மூவாயிரத்து 471 அரச சேவையாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் உரிய முறையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யாமை, திணைக்கள தலைவரின் கையொப்பம் பெறாமை உள்ளிட்ட சில காரணங்களால் இருநூற்று 45 பேரின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மூவாயிரத்து 226 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 6 =

*