;
Athirady Tamil News

எழுகை சுவிஸ் நிறுவனத்தனால் வறிய குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு..!! (படங்கள்)

0

சுவிஸ் நாட்டைத்தளமாகக் கொண்டு இயங்கும் எழுகை தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட உதவித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வவுனியாவில் கணவன் மனைவி இருவரும் வாய்பேசமுடியாத நிலையில் நான்கு பெண் பிள்ளைகளை கல்வி கற்பித்து வருகின்றனர்.

இவர்களின் குடும்பத்தலைவன் வேலைக்குச் சென்று வருவதற்காக வவுனியா பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் துவிச்சக்கரவண்டி உதவிகோரியிருந்தார்.

அவருக்கும், மகாறம்பைக்குளம் கிராமத்தில் தாய், தந்தையரை இழந்த நிலையில் உறவினரின் பராமரிப்பில் கல்விகற்கும் இரட்டைச் சகோதரிகளுக்கும் எழுகை சுவிஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர். க.உதயராசா, மற்றும் எழுகை அமைப்பின் இலங்கைச் செயலாளர் கோ. ரூபகாந், எழுகை சுவிஸ் பொருளாளர். சி.யோகராசா ஆகியோரும் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 1 =

*