;
Athirady Tamil News

கிழக்கு மாகாணத்தில் தபால் மூல வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றது…!!

0

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் தபால் மூல வாக்களிப்பு, அமைதியாகவும் சுமூகமாகவும் இன்று (25) நடைபெற்றது.

அம்பாரை மாவட்டத்தின், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்றுக்காலை முதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவுகளில் அலுவலக உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

வாக்குப்பதிவு ஆரம்பமான நேரம் முதல் தமது வாக்கைப் பதிவு செய்வதற்காக உத்தியோகத்தர்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

வாக்குப்பதிவுகள் நாளையும் (26) நடைபெறவுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 111 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலங்கள் மற்றும் அரச திணைக்களங்கள் அரச அலுவலகங்கள் என்பவற்றில் இந்த தபால் மூலமான வாக்களிப்பு நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் இன்று காலை 9 மணி முதல் உத்தியோகத்தர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் இரண்டு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் தேர்தல் அலுவலகம் என்பவற்றில் முதல் கட்டமான தபால் மூலமான வாக்களிப்பு கடந்த திங்கட்கிழமையன்று நடைபெற்றது.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,820 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 565 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், 9,255 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் பிரதேச செயலகம், வலயக் கல்வி அலுவலகம், நகரசபை, பிரதேச சபை, வைத்தியசாலை, கடற்படை அலுவலகம் போன்ற அரச அலுவலகங்களில், இன்று (25) தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 12,218 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

முறையாக பூர்த்தி செய்யப்படாமை உட்பட பல்வேறு காரணங்களால் 221 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 11, 997 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக, மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − seventeen =

*