;
Athirady Tamil News

வவுனியா சாந்தசேலை வீதியைப் புனரமைத்துத்தருமாறு கோரிக்கை…!! (படங்கள்)

0

வவுனியா சாந்தசோலை வீதியை புனரமைத்துத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர். இவ்வருடம் வீதி அபிவிருத்தித்தி அதிகாரசபையின்அதிவேக திட்டத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் இன்று வரையில் இப்பாதை புனரமைப்பதற்கு எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை இப்பாதையூடாகப்பணிப்பதில் பாடசாலை மாணவர்கள் உட்பட் பலர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள குறித்த வீதியை செப்பனிட்டு பாதுகாப்பாண பயணத்தை மேற்கொள்வதற்கு புனரமைத்துத்தருமாறு கோரியுள்ள அப்பகுதி மக்கள் குறித்த வீதியிலுள்ள பழமைவாய்ந்த பாலம் ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது.

இதனால் இப்பாதையூடாகப் பயணிப்பது ஆபத்தானதாகவே உள்ளது என்றும் இப்பாதையூடாக மகாறம்பைக்குளம், பூந்தோட்டம், பெரியார்குளம், போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பெருமளவு மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் இது தொடர்பில் பலருக்கு மகஜர் வழங்கப்பட்டும் இன்று வரையில் எவ்விதமான நடக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 12 =

*