;
Athirady Tamil News

ராபர்ட் முகாபேவுக்கு பொதுமன்னிப்பு: புதிய அதிபர் அறிவிப்பு..!!

0

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக தொடர்ந்து பிரதமர் மற்றும் அதிபர் பதவியில் ராபர்ட் முகாபே இருந்து வந்தார். அவர் ஆட்சி காலத்தில் பல்வேறு முறைகேடுகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேர்தலில் தில்லுமுல்லு செய்து தொடர்ந்து வெற்றி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவருடைய பதவி காலம் முடிந்ததையடுத்து புதிய அதிபர் தேர்தல் நடக்க இருந்தது. அதில் தனது மனைவியை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற செய்ய முயற்சித்து வந்தார்.

இது பொதுமக்கள் மத்தியிலும், அவரது கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே ராணுவம் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு ராபர்ட் முகாபேவை சிறைபிடித்தது. அவரது ஆட்சியை அகற்றிவிட்டு மெர்சன் மனங்காவா தலைமையில் புதிய ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.

ராபர்ட் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டு காவலில் உள்ளனர். ஏற்கனவே ராபர்ட் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த குற்றங்களுக்காக விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ராபர்ட் முகாபே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எந்த விசாரணையும் நடைபெறாது என்று புதிய அதிபர் மெர்சன் மனங்காவா அறிவித்துள்ளார். அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய அதிபரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ராபர்ட் முகாபேவுக்கும், குடும்பத்தினருக்கும் தண்டனை வழங்கியே தீரவேண்டும் என்று குரல்கொடுத்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 4 =

*