;
Athirady Tamil News

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு: டொனால்டு டிரம்பிடம் சிறப்பு குழு விசாரணை..!!

0

ஒபாமா பதவி காலம் முடிந்ததையடுத்து அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர்.

அமெரிக்காவின் எதிரி நாடான ரஷியா இந்த தேர்தல் விவகாரத்தில் தலையிட்டதாக புகார் கூறப்பட்டது. ஹிலாரி கிளிண்டன் வெற்றியை ரஷியா விரும்பவில்லை. எனவே ரஷியா டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக சில வி‌ஷயங்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

குறிப்பாக ஹிலாரியின் ஈ-மெயில் வெளியான விவகாரத்தில் ரஷியா பின்னணியில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதை ரஷியா மறுத்தது. டொனால்டு டிரம்பும் மறுத்து வந்தார்.

இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக ராபர்ட் தலைமையிலான விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்தியுள்ளது. தேர்தலின் போது டொனால்டு டிரம்பின் பிரசார அமைப்பாளர்களாக செயல்பட்டவர்கள், தேர்தல் பணியில் இருந்த முன்னணி நபர்கள் போன்றவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.

அடுத்ததாக அதிபர் டொனால்டு டிரம்பிடமும் விசாரணை நடத்தப்படும் என்று ராபர்ட் அறிவித்துள்ளார். அடுத்த வாரம் வாக்கில் இந்த விசாரணை நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே டொனால்டு டிரம்ப் நான் விசாரணைக்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். ஆனாலும் தனக்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அவர் தொடர்ந்து கூறிவருகிறார். டொனால்டு டிரம்பிடம் எழுத்து வடிவத்தில் விசாரணை நடத்துவதா? அல்லது பேச்சு முறையில் விசாரணை நடத்துவதா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் ராபர்ட் கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + four =

*