;
Athirady Tamil News

பெண் மனித வெடிகுண்டு காஷ்மீருக்குள் ஊடுருவல்?: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!!

0

இந்தியாவின் 69-வது குடியரசு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

அப்போது தீவிரவாதிகள் கைவரிசை காட்டி விடக் கூடாது என்பதற்காக முக்கிய நகரங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்குள் மிகப்பெரிய நாசவேலை செய்ய பெண் மனித வெடிகுண்டு ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உஷாராக இருக்கும்படி காஷ்மீரில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண் மனித வெடிகுண்டு ஏற்கனவே ஊடுருவி விட்டதாக உளவுத்துறை எச்சரித்து இருப்பதால் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே அதிரடி சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மைதானத்தில் நாளை குடியரசு தின அணிவகுப்பு நடைபெற உள்ளது. அங்கு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல காஷ்மீரில் உள்ள பல இடங்கள் ஏற்கனவே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + thirteen =

*