;
Athirady Tamil News

மகன் தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் குடும்பத்துடன் தொழிலாளி தற்கொலை..!!

0

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழாவை சேர்ந்தவர் ராகவன் (வயது 55). சவரத்தொழிலாளி. இவரது மனைவி ஷோபா (48). இவர்களது மகள் கோபிகா (19). கோபிகா திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் வெகுநேரமாகியும் ராகவனின் வீடு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களது படுக்கை அறையின் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது கணவன்- மனைவி தூக்கிலும், கோபிகா படுக்கையிலும் பிணமாக கிடந்தனர்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து செருபுழா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தளிப்பரம்பு தாசில்தாருடன் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் உடலை மீட்டு பரியாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராகவன்- ஷோபா தம்தியின் மகன் ஜீத்து (22). இவர் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கம் பெற்றோர் மற்றும் தங்கையை வாட்டியது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சூரில் இருந்து மகள் கோபிகாவை வரவழைத்து 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*