;
Athirady Tamil News

டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வரி வசூல் 86703 கோடி ரூபாய்..!!

0

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 24-ந் தேதி நிலவரப்படி, டிசம்பர் மாத வசூல், ரூ.86 ஆயிரத்து 703 கோடியாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 56 லட்சத்து 30 ஆயிரம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்குகளை தாக்கல் செய்வதற்கு ஜனவரி 18 கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் சுமார் 9 லட்சத்து 25 ஆயிரம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் ரூ.421.35 கோடி ஜி.எஸ்.டி.யாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி வசூல், ஜூலை மாதத்தில் ரூ.95 ஆயிரம் கோடியாகவும், ஆகஸ்டு மாதத்தில் ரூ.91 ஆயிரம் கோடியாகவும், செப்டம்பர் மாதம் ரூ.92,150 கோடியாகவும், அக்டோபர் மாதம் ரூ.83 ஆயிரம் கோடியாகவும், நவம்பர் மாதம் ரூ.80,808 கோடியாகவும் இருந்தது. கடந்த மூன்று மாதங்களாக ஜி.எஸ்.டி. வசூல் குறைந்திருந்த நிலையில், இந்த மாதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*