;
Athirady Tamil News

குடியரசு தின விழாவில் ராகுல்காந்திக்கு 4-வது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு – காங்கிரஸ் அதிருப்தி..!!

0

இந்தியாவின் 69-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி செங்கொட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். நாளை நடைபெறும் விழாவில் பத்து ஏசியான் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

இதில் இந்தியாவை சேர்ந்த முக்கிய தலைவர்களும் கலந்துகொள்வார்கள். குடியரசுதின விழாவில் பங்கேற்கும் மிக முக்கிய நபர்களுக்கான இருக்கைகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குடியரசுதின விழாவில் பங்கேற்கும் முக்கிய நபர்களுக்கான இருக்கைகளில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு 4-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் ராகுல் காந்தி நாளை நடைபெறும் குடியரசுதின விழாவில் கலந்துகொள்வார் என கூறப்பட்டுள்ளது.

பொதுவாக எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படுவது தான் வழக்கம். கடந்த ஆட்சியில் பா.ஜ.க. தலைவர் அத்வானிக்கு முதல் வரிசையில் இடம் கொடுக்கப்பட்டது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + seven =

*