;
Athirady Tamil News

நிதி மோசடி விசாரணையை எதிர்கொள்ளத் தயார் – தொண்டமான்..!!

0

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மன்ற நிதிமோசடி தொடர்பாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைத்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மன்றத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் எமக்கெதிராக முறைபாடு செய்யப்பட்டுள்ளமை எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.

எந்தவோர் சந்தர்ப்பத்திலும் எமக்கெதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சினைகளுக்கு நாம் அதற்கேற்றவாறு முகங்கொடுக்கத் தயாராகவுள்ளோம்.

தொண்டமான் தொழிற்பயிற்சி மன்ற நிதி மோசடியென சொல்லிக்கொண்டு முறைபாடுகளை நிதி மோசடி விசாரணை பிரிவுக்குத் தெரிவித்துள்ள இவர்கள் கடந்த மூன்று வருட காலப்பகுதிகளில் தூங்கிக்கொண்டு இருந்தார்களா?

இந்தத் தேர்தலில் சேவலுக்கும், வெற்றிலைக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகமுள்ள நிலையில், இதில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கபட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என எண்ணுகிறேன்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*