;
Athirady Tamil News

அதிகரிக்கும் செல்ஃபி மரணங்கள்..!!

0

ஹைதராபாத்தில் ஓடும் ரயிலுக்கு மிக அருகில் நின்று செல்ஃபி வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் மீது ரயில் மோதி, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த செல்ஃபி வீடியோ ஜனவரி 24ஆம் தேதி சமூகவளைதலங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தில் சிவா என்பவர் உயிருடன் இருந்தாலும், இந்தியாவில் செல்ஃபியால் உயிரிழந்தவர்கள் அதிகம். செல்ஃபி பலரின் மரணத்துக்கு வழிவகுத்தது.

யாஷ் குமார், சுபம் சைனி என்ற இரண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள், மற்றொரு ஐந்து பேருடன் டெல்லி மயூர் விஹார் ரயில் தண்டவாளத்தில் ரயிலின் பின்னணியில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது, எதிர் திசையில் இருந்து மற்றொரு ரயில் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை. இதன்விளைவாக, இரண்டு பேர் உயிரிழந்தனர்.

தகவல்களின்படி, இந்தியாவில் 2014 ஆம் ஆண்டிலிருந்து செல்ஃபி எடுக்க முற்பட்டபோது,57 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த பட்டியலில் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும்,உள்ளன.இந்தயா முதலிடத்தில் உள்ளது.

இதில்,பாதிக்கப்பட்டவர்களின் சராசரி வயது 21. அவர்களில் 75 சதவிகிதம் பேர் ஆண்கள்.

இந்த முட்டாள்தனத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். ஆனால், அதை இன்னும் ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இருப்பதாக தெரியவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 3 =

*