;
Athirady Tamil News

டெல்லியில் பள்ளி வேனை மறித்து மாணவி கடத்தல் – தடுக்க முயன்ற டிரைவர் மீது துப்பாக்கி சூடு..!!

0

டெல்லியில் நேற்று காலை ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வேனை மறித்து நிறுத்தினர்.

கண் இமைக்கும் நேரத்தில் வேனில் இருந்த 1-ம் வகுப்பு மாணவியை அவர்கள் கடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வேன் டிரைவர் அவர்களை தடுக்க முயன்றார். உடனே மர்ம நபர்களில் ஒருவன், வேன் டிரைவர் மீது துப்பாக்கியால் சுட்டான். பின்னர் மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மாணவியுடன் தப்பி சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த டிரைவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவளை கடத்திச்சென்ற மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ள நிலையில் இச்சம்பவம் நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*