;
Athirady Tamil News

ரெயில் தண்டவாளம் அருகே ‘செல்பி’ எடுக்காதீர்கள் – ரெயில்வே மந்திரி வேண்டுகோள்..!!

0

கோவையில் ஓடும் ரெயிலுக்கு முன்னால் தண்டவாளத்தில் நின்றபடி ‘செல்பி’ எடுத்துக் கொண்டிருந்த ஒரு வாலிபர், அந்த ரெயில் மோதி படுகாயம் அடைந்தார். அவர் எடுத்த ‘செல்பி’ வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ரெயில் தண்டவாளம் அருகே ‘செல்பி’ எடுக்க முயன்றும், சாகசம் நிகழ்த்தியும் இளைஞர்கள் சிலர் விபத்தில் சிக்கிய சம்பவங்களை நான் செய்தியிலும், வீடியோவிலும் பார்த்தேன். இத்தகைய விபத்துகள் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளன.

இளைஞர்கள்தான், நாட்டின் எதிர்காலம். ஆகவே, அவர்கள் தண்டவாளம் அருகே செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த வேண்டாம். தண்டவாளத்தையும், ரெயில்வே கிராசிங்கையும் கடக்கும்போது, கவனமாக செயல்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 2 =

*