;
Athirady Tamil News

அரச மருத்துவர்கள் 30ம் திகதி பணிப்புறக்கணிப்பில்…!!

0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் இதுவரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக எதிர்வரும் 30 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியிருந்த போதிலும் அரசாங்கம் அதற்கு உரிய பதிலை வழங்கவில்லை.

இதன்காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*