;
Athirady Tamil News

தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தானும் விஷம் அருந்திய தாய்..!!

0

தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய தாயொருவர் மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றரை மற்றும் இரண்டரை வயதுடைய குழந்தைகளுக்கே குறித்த தாய் இவ்வாறு விஷம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவர்கள் மஹியங்கனை – கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் , குழந்தைகள் மற்றும் தாயின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

எனினும் , விஷம் அருந்தியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 20 =

*