;
Athirady Tamil News

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு…!!

0

கிளிநொச்சி – சுண்டிக்குளம் சிறு கடற்பகுதியில் தொடர்ச்சியான பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் இறால் தொழில் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,சுண்டிக்குளம் சிறுகடல் பகுதி தற்போது இறால் தொழிலுக்காக வழங்கப்பட்டு தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த காலங்களை போன்று தொழிலை மேற்கொள்ள முடிவதில்லை. அதாவது அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக நிலவி வரும் பனிமூட்டம் மற்றும் குளிரான காலநிலை என்பவற்றால் இறால் பெருக்கம் குறைவாக காணப்படுகிறது.

கடல் நீர் சூரிய ஒளிபட்டு ஓரளவு சூடாக இருக்கின்ற போது தான், இறால் உற்பத்தி இருக்கும். தற்போது காலநிலை மாற்றத்தால் இறால் பெருக்கம் குறைவாகவே காணப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + thirteen =

*