;
Athirady Tamil News

டெல்லி அமர்ஜவான் ஜோதியில் மறைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை..!!! (வீடியோ)

0

நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக,ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இம்முறை 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

விழா தொடங்குவதற்கு முன்னதாக, இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் மறைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், இரண்டு நிமிட மவுன அஞ்சலியும் அவர் செலுத்தினார். அவருடன் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து, பிரதமர் அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத்துக்கு புறப்பட்டுச் சென்றார். சற்று நேரத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வருகை தர உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − eight =

*