;
Athirady Tamil News

டெல்லியில் 30-ந்தேதி மத்திய அரசுக்கு எதிராக யஷ்வந்த் சின்கா பாதயாத்திரை..!!

0

பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான யஷ்வந்த் சின்கா பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

குறிப்பாக பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

இந்த நிலையில் அவர் வருகிற 30-ந் தேதி டெல்லியில் பாத யாத்திரை ஒன்றை நடத்த போவதாக அறிவித்துள்ளார். நாட்டையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் இந்த பாதயாத்திரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது, மத்திய அரசுக்கு எதிரான பாதயாத்திரை என்று வெளிப்படையாக கூறாவிட்டாலும் அவர் நடத்தும் பாதயாத்திரை மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்க முடிகிறது.

நாட்டையும், அரசியல் சட்டத்தையும் பாதுகாப்போம் என்று அவர் தலைப்பிட்டு இருப்பது தற்போதைய அரசில் நாட்டுக்கும், அரசியல் சட்டத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறுவது போல் உள்ளது.

இந்த பாதயாத்திரை டெல்லி ராஜ்காட்டில் தொடங்கி பாராளுமன்ற வளாகம் அருகே உள்ள கான்ஸ்டிடியூ‌ஷன் கிளப் அருகே முடிவடைகிறது.

இதில் பல்வேறு சமூக தலைவர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + ten =

*