;
Athirady Tamil News

கிளிநொச்சியில் இரு சிறுவர் இலக்கிய நூல்கள் வெளியீடு…!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் செல்லையா தாத்தாவும் செல்லக்குழந்தைகளும், மற்றும் பாக்கியம் பாட்டியின் விண்வெளி பயணம் ஆகிய இரண்டு சிறுவர் இலக்கிய நூல்கள் வெயிட்டு வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி உதவிக் கல்விப் பணிப்பாளர் சு. ஸ்ரீகுமரன்( இயல்வாணன்) எழுதிய சிறுவர் இலக்கிய நூல்களே வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளன.

மிக நீண்ட காலத்திற்கு பின்னர் சிறுவர் இலக்கியத்தில் இரண்டு நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது கிளிநொச்சி வலய தமிழ்ப் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி பிறேமா மதுரநாயகம் தலைமையில் அண்மையில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டத்தில் இடம்பெற்றது

நூலின் முதற் பிரதியை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் பகிரதன் பெற்றுக்கொண்டார். நூல் மதிப்பீட்டுரையை அருட்தந்தை கலாநிதி யோசுவா, கிளிநொச்சி மகா வித்தியாலய ஆசிரியர் குகபரன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்

நிகழ்வில் ஒய்வுப்பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் க. முருகவேல் மற்றும் கல்விச் சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*