;
Athirady Tamil News

மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்து: இளைஞன் பலி…!! (படங்கள்) இணைப்பு

0

வவுனியாவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்து: இளைஞன் பலி

வவுனியா, விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

மேசன் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வவுனியா, அரபா நகர் பகுதியை சேர்ந்த சஜா என்கின்ற 28 வயதுடைய இளைஞன் பயணித்த மோட்டர் சைக்கிள் வேகக் கட்டுப்பபாட்டை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக அறியப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − seven =

*