;
Athirady Tamil News

அக்கரபத்தனையில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளரின் வீட்டில் தீ…!!

0

அக்கரபத்தனை பிரதேசபையின் கீழ் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் ஒருவர் வீட்டில் தீ பரவிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (25) இரவு 09.15மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போபத்தலாவ, வலாகம்புற கொலனியில் அமைக்கபட்டிருந்த வீட்டில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து சாம்பளாகியுள்ளதாகவும் தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த வீட்டில் எவரும் இருக்கவில்லையெனவும் வீட்டார்கள் அனைவரும் வெளியில் சென்றிருந்ததாகவும் அக்கரபத்தனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*