;
Athirady Tamil News

ஹட்டனில் தூக்கிட்ட நிலையில் 14 வயது பாடசாலை மாணவன்…!!

0

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி தோட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய மாணவனொருவன் நேற்று (25) மாலை தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுகப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக குறித்த மாணவனை பாடசாலையின் அதிபர் தண்டித்தை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற மாணவனை அவனுடைய நண்பர்களின் பெற்றோர் தகாத வார்த்தையில் பேசியமைக்காக வீட்டில் தனிமையில் இருந்த போதே குறித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவன் அணிந்திருந்த ஆடையின் பையில் இருந்து கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவன் பிரசாந்தின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*