;
Athirady Tamil News

காஷ்மீர்: குடியரசு தின விழாவை ரத்தக்களறியாக்க வந்த பெண் மனித குண்டு கைது..!!

0

காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் திட்டத்துடன் வந்த மனித குண்டு என்று சந்தேகிக்கப்படும் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இன்று குடியரசு கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநில போலீசாருக்கு மத்திய புலனாய்வு முகமையில் இருந்து கடந்த 23-ம் தேதி ஒரு ரகசிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

காஷ்மீரில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பின் மீதோ அல்லது அந்த இடத்தின் அருகாமையிலோ வெளி மாநிலத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் மனித குண்டு தாக்குதலில் ஈடுபடலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த ஒரு இளம்பெண்ணை சாடியா அன்வர் ஷேக் என்னும் 18 வயது இளம்பெண்
இந்த தாக்குதலை நடத்துவதற்காக புனே நகரில் இருந்து காஷ்மீர் வந்துள்ளதாக தெரிகிறது.

எனவே, அனைத்து இடங்களிலும் மிகவும் எச்சரிகையுடன் சந்தேகத்துக்குரிய பெண்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் அவர்களை தீவிரமாக பரிசோதிக்கவும் அறிவிறுத்தப்படுகிறது என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு தெற்கு காஷ்மீர் பகுதியில் சாடியா அன்வர் ஷேக்-ஐ போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்ததாக ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸ் கூடுதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் முனிர் கான் இன்று தெரிவித்துள்ளார்.

பிடிபட்ட பெண்ணிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் முழுமையான விபரங்கள் கிடைத்த பின்னர் இதுதொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ள சாடியா அன்வர் ஷேக் கடந்த 2015-ம் ஆண்டு புனேவில் உள்ள கல்லூரியில் படித்து கொண்டிருந்த நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்து மூளைச்சலவை செய்யப்பட்டவர். சிரியாவுக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

இதுதொடர்பான தகவலை மோப்பம் பிடித்த தீவிரவாத தடுப்பு படையினர் அவரிடம் விசாரணை நடத்தியதுடன் மனவளக்கலை பயிற்சியின் மூலம் அவரது திட்டத்தை மாற்ற முயன்றனர் என தற்போது தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 7 =

*