;
Athirady Tamil News

கையுறையை பெற்றெடுத்த பெண்..!!

0

பிரான்சில் பெண் ஒருவர் Latex Glove மற்றும் Five Compresses-யை ஈன்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது.

48 வயதான பெயரிடப்படாத பெண் ஒருவர், தெற்கு பிரான்சின் மார்சேயில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை பிரச்சனை தொடர்பாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் அறுவை சிகிச்சைக்கு பின்னர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.வயிற்றில் கத்தியை கொண்டு குத்துவது போன்று வலியை உணர்ந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அவர்களோ சிகிச்சை ஏதும் செய்யாமல் வலி நிவாரண மாத்திரைகளை அளித்துள்ளனர், மாத்திரைகள் எடுத்துக் கொண்டும் வலி சரியாகவில்லை.

மூன்று நாட்கள் கழித்து பிரசவ வலி போன்று கொடூரமான வலியை உணர்ந்ததுடன் Latex Glove மற்றும் Five Compresses-களை ஈன்றெடுத்துள்ளார்.

நான்கு மணிநேரம் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண், மருத்துவனையை நாடியுள்ளார், கடைசியாக செய்த அறுவைசிகிச்சையின் போது மருத்துவர்கள் கவனக்கோளாறால் தவறுதலாக வைத்துவிட்டது தெரியவந்தது.

அலட்சியப்போக்குடன் நடந்து கொண்ட மருத்துவர்கள் மீது குறித்த பெண் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 14 =

*