;
Athirady Tamil News

பிரான்சில் பெண்களை கேலி செய்தால் தண்டனை: விரைவில் புதிய சட்ட மசோதா தாக்கல்..!!

0

பிரான்ஸ் பெண்களின் உடல் அமைப்பை பொது இடத்தில் கேலி செய்யும் நபர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

சமீபகாலமாக பிரான்ஸில் பெண்களுக்கு எதிரான பாலியான வன்கொடுமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இல்லாத நாளே இல்லை என கூறும் அளவிற்கு புது புது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் விதமாகவும் வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நடப்பதை தவிர்க்கும் நோக்கத்துடனும் புதிய சட்டத்தை அமல்படுத்த பிரான்ஸ் அரசு முயற்சி செய்து வருகிறது.

அதன் தொடக்கமாக பேருந்து, சாலை போன்ற பொது இடங்களில் வைத்து பெண்களின் உடல் அமைப்பை விமர்சனம் செய்வது, பின் தொடர்ந்து சென்று கேலி செய்வது, வழி விடாமல் மறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு 80 பவுண்ட்கள் அபராதம் விதிக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை இரண்டு வாரங்களுக்குள் செலுத்துவோருக்கு 120 பவுண்டுகளும் அதற்கும் கடந்து செலுத்துவோருக்கு 325 பவுண்டுகளும் அபராதமாக விதிக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான சட்ட முன்வடிவை தயாரித்துள்ள நாட்டின் சமத்துவத்திற்கான செயலாளர் மெர்லின் ஷியப்பா, பாராளுமன்றத்தில் சட்ட அமைச்சர் நிக்கோல் முன்னிலையில் அடுத்த வாரம் தாக்கல் செய்வார் என தெரிகிறது.

மேலும் இந்த புதிய சட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் ஆதரவை ஒருமனதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − sixteen =

*