பேருந்தில் சிக்கி பாடசாலை மாணவி பலி…!!

அம்பலந்தொட்ட – பட்டபொல – எட்டம்பகஹா பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவி பேருந்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அந்த பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவி என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.