;
Athirady Tamil News

10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் கிளிநொச்சி பாடசாலை ஒன்றிற்கு சோலர் மின்சார உதவிகள்..!! (படங்கள்)

0

10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் கிளிநொச்சி பாடசாலை ஒன்றிற்கு சோலர் மின்சார உதவிகள்

உதவி செய்யும் உள்ளத்துக்கு வயது இல்லை என்பது உண்மைதான் அந்த வகையில் ஒரு உதாரண புருசராக அமைகிறார் அமெரிக்காவில் உள்ள 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இந்தியாவை சேர்ந்த பள்ளி மாணவன் எம்.கே. சுப்பிரமணியம்.

அமெரிக்காவில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் இந்தியாவில் கேரலாவை சேர்ந்த இம் மாணவன் பாடசாலை சென்று திரும்பிய பின்னர் அமெரிக்காவில் விவசாய சந்தையில் வயலின் வாசித்து அதில் சேகரிக்கப்படும் பணத்தை பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்கு சோலர் மின்சாரங்களை வழங்கிவருகிறார.; இந்தியாவில் இரண்டு பாடசாலைகளுக்கும் இலங்கையில் முதல்தடைவையாக கிளிநொச்சி கிலாலி றோமன்கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கும் இத்திட்டத்தை செய்துள்ளார் பத்தாம் ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் எம்.கே. சுப்பிரமணியம்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் மாணவன் தான் தனது தாத்தாவான ஓய்வு பெற்ற இந்திய இராணுவ கேணல் அவர்களுடன் இந்தியாவில் கிராமங்களில் உள்ள பாடசாலைக்கு சென்றிருந்தேன் அப்போது அப் பாடசாலைகளில் அனைத்து வசதிகள் இருந்தும் மின்சார வசதிகள் இல்லாமல் கணனிகள் என பல கருவிகள் காணப்பட்டது அத்துடன் மாணவர்கள் கடும் உஸ்னம் காரணமாக அவதிப்பட்டார்கள் அதை பார்க்க மிகவும் கவலையாக உள்ளது இவர்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அமெரிக்காவில் விவசாய சந்தையில் வயலின் வாசித்து அதில் வரும் பணத்தில் இவ்வாறு உதவி செயற்பட்டு வருகின்றேன் என்று தெரிவித்தார் அவ் மாணவன்.

இன் நிகழ்வில் இந்தியா துணைத்தூதுவர் அ. நடராஜன், ஓய்வு பெற்ற இந்திய இராணுவ கேணல் கணபதி அவர்களின் பாரியார்மற்றும் பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் விஜயராணி என பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 6 =

*