குடியரசு தின கொண்டாட்டம்: பிரமிக்க வைத்த கலாச்சார ஊர்திகளின் அணிவகுப்பு – வீடியோ..!!

இந்தியாவின் 69-வது குடியரசுத்தின விழா தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பிரதமர் மோடி, ஜனாதிபதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் முப்படை மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை காண ஏராளாமான பொதுமக்கள் கூடியிருந்தனர். தேசிய கொடியை ஜனாதிபதி ஏற்றியதை அடுத்து, முப்படை வீரர்கள் மற்றும் சிறப்புப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவ டாங்கிகள், பிரமோஸ் ஏவுகணை, விமானப்படை மற்றும் கடற்படையில் உள்ள நவீன தளவாடங்கள் அணிவகுத்தன.
அதன்பின் தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாநிலத்தின் சார்பாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
கர்நாடகா, மகாராஷ்டிரா, இமாச்சலப்பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தன. மேலும் பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பாரம்பரிய நடனம் ஆடினர்.
வனவிலங்கள் – கர்நாடகா
மகாராஜா சத்ரபதி சிவாஜி – மகாராஷ்டிரா
அசாமின் அலங்கார ஊர்தி
புத்த மதம் – இமாச்சலப்பிரதேசம்
பெண் வீராங்கனைகளின் மோட்டார் சைக்கிள் சாகசம்
விமானப்படை வீரர்களின் சாகசம்
நிகழ்ச்சியின் இறுதியில் விமானப்படை வீரர்கள் வானில் சாகம் புரிந்தனர். இதையடுத்து, தேசிய கீதம் பாடிய பின் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.