;
Athirady Tamil News

டெல்லி ஜாமா மசூதியில் ஜும்மா தொழுகையில் பங்கேற்ற மலேசியப் பிரதமர்..!!

0

குடியரசு தின விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு வந்துள்ள மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் டெல்லியில் உள்ள ஜாமா மசூதியில் இன்று நடைபெற்ற ஜும்மா தொழுகையில் பங்கேற்றார்.

டெல்லியில் இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பை சிறப்பு விருந்தினராக பார்வையிட்ட மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் டெல்லியில் பாராளுமன்றம் அருகேயுள்ள உள்ள ஜாமா மசூதியில் இன்று பிற்பகல் சுமார் ஒருமணியளவில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை சிறப்பு (ஜும்மா) தொழுகையில் பங்கேற்றார்.

மலேசியப் பிரதமரின் வருகையையொட்டி ஜாமா மசூதி அமைந்துள்ள லுட்யென்ஸ் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + nineteen =

*