;
Athirady Tamil News

சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழில் ஆரம்பம்…!! (படங்கள்)

0

சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

யாழ்.மாநகர சபை மைதானத்தில் 09ஆவது தடவையாக இக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , மத்திய தொழில் துறை அமைச்சர் தயாகமகே , சிறுவர் மகளீர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் , யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம்முறை நடைபெறும் இக் கண்காட்சியில் 300 காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இந்திய வர்த்தக தொழித்துறை மன்றங்களை ஒன்றிணைந்த ” அசோக் சாம் ” அமைப்பில் உள்ள 75 இந்திய நிறுவனங்கள் நேரடியாக பங்கு பற்றுகின்றன. எனபது குறிப்பிடத்தக்கது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*