;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான்: தலிபான்களின் மோர்ட்டார் குண்டுக்கு 6 குழந்தைகள் பரிதாப பலி..!!

0

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள பிரபல இன்ட்டர்கான்டினென்ட்டல் ஓட்டல் மற்றும் ஜலாலாபாத் நகரில் உள்ள குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனத்தின் அருகில் சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து கஸ்னி மாகாணத்தில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகளை வேட்டையாட ஆப்கானிஸ்தான் விமானப் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கஸ்னி நகரின் மையப்பகுதியில் இன்று தலிபான் தீவிரவாதிகளின் மோர்ட்டார் குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 6 குழந்தைகள் உடல் சிதறி உயிரிழந்தனர் என கஸ்னி நகர போலீஸ் தலைவர் முஹம்மது சமான் தெரிவித்துள்ளார்.

ஆனால், தலிபான்கள் தரப்பில் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்களில் சிலரும் இதை உறுதிப்படுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + five =

*