;
Athirady Tamil News

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பாரம்பரிய நீராவி ரெயில் இயக்கம்..!! (வீடியோ)

0

தெற்கு ரெயில்வேயின் முதன்மை கோட்டமான சென்னையில் வருடந்தோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய ரெயில்கள் இயக்குவது வழக்கம். இந்த வகையில் நேற்று மதியம் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இ.ஐ.ஆர்-21 ரெயில் என்ஜினுடன் (நீராவியில் இயங்கக் கூடியது) கூடிய ரெயிலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் இ.ஐ.ஆர்-21 ரக என்ஜினுடன், ஒரே ஒரு ரெயில் பெட்டி மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தது. அப்போது பொதுமக்கள் அந்த ரெயிலில் ஏறுவதற்கு முயற்சித்தனர். ஆனால் இந்த ரெயிலில் ஏற அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் தங்களது செல்போனில் ரெயிலை படம் மட்டும் எடுத்து கொண்டனர்.

இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-

வழக்கமாக பாரம்பரியமான ரெயில்கள், விழிப்புணர்வு ரெயில்கள் உள்பட சிறப்புக்குரிய ரெயில்கள் இயக்கப்படும்போது, அதில் ஏறி உள்ளே சுற்றி பார்ப்போம். ஆனால் இந்த ரெயிலில் பயணிகள் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. பாரம்பரிய ரெயில்கள் இயக்கப்படுவதே பொதுமக்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் இப்படி அனுமதி மறுத்தால் இந்த ரெயில்கள் இயக்கப்படுவதில் பிரயோஜனமே இல்லை. எனவே இனி இயக்கப்படும் பாரம்பரிய ரெயில்களிலாவது பயணிகள் உள்ளே சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும். அப்போது தான் பாரம்பரிய ரெயில் இயக்கப்படுவதின் அர்த்தம் முழுமையடையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 3 =

*