;
Athirady Tamil News

மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக ஏழு கட்சிகள் பேரணி..!!

0

பாராளுமன்ற தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெறக்கூடாது என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இரண்டு பெரிய தேசிய கட்சிகளான பா.ஜகவுடனும், காங்கிரசுடனும் பிற மாநில கட்சிகள் யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்று தெரியாத நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க பா.ஜ.க. வியூகம் வகுத்து வருகிறது.

ஆனால், பா.ஜ.க.வுக்கு எதிராக மும்பையில் நேற்று ஏழு கட்சிகள் நடத்திய பேரணி, எதிர்கட்சிகள் ஓரணியில் ஒன்றுசேர்ந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

மராட்டிய மாநிலத்தில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாட்டம் முடிந்தது. அதன்பின்னர், மும்பையின் ஓவல் மைதானத்தில் ஏழு கட்சிகள் தலைவர்கள் ஒன்றாக கைகோர்த்தபடி பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஐக்கிய ஜனதா தளம் (அதிருப்தி) தலைவர் சரத்யாதவ், சி.பி.எம்.மின் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டின் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தினேஷ் திரிவேதி. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா, காங்கிரசின் சுஷில்குமார் ஷிண்டே, பதிதார் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் ஆகிய ஏழு கட்சிகளின் தலைவர்களும் தங்களின் கைகளை ஒன்றாக கோர்த்தபடி வீதியில பேரணி நடத்தினர். அப்போது அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்று என கோஷமிட்டனர். இந்த பேரணி தெற்கு மும்பையின் கேட்வே ஆப்இந்தியாவில் நிறைவடைந்தது.

அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் சரத்பவார் பேசுகையில், நாட்டில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய தாக்குதல் நடக்கிறது. அதனை எப்பாடுபட்டாவது காப்பாற்ற வேண்டும். மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக வரும் 29-ம் தேதி டெல்லியில் மிக பிரமாண்ட மாநாடு நடத்தி நாம் யார் என்பதை காட்ட வேண்டும். பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்கட்சிகள் எங்கள் பின்னால் வரலாம் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + seven =

*