;
Athirady Tamil News

நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்: விபத்தில் பலியான சோகம்..!!!

0

ஜேர்மனியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது கணவருக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜேர்மனியின் Autobahn நெடுஞ்சாலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த கணவருக்கும், மனைவிக்கும் ஏற்பட்ட வாய்த்தகறாறு முற்றியதால் அவர் ஒரு கத்தியை எடுத்து மனைவியைக் குத்தியுள்ளார்.

அதே சமயத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி நின்றது.இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட மனைவி இரத்தம் வடிய சாலையில் இறங்கி ஓடினார்.

துரத்திச் சென்ற கணவனை வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் அவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவர் மீது ஏறாமல் தவிர்ப்பதற்காக பின்னால் வந்த கார்கள் திடீரென நிற்க முயல, மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 30 பேர் கொண்ட அவசர உதவிக்குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தொண்டையில் கத்தியால் குத்தப்பட்ட அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.Bochum பகுதி பொலிசார் கொலை வழக்கு ஒன்றைத் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 7 =

*