;
Athirady Tamil News

குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

0

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்­ப­வர்­க­ளுக்கு அந்­நாட்டு உள்­வி­வ­கார அமைச்­சினால் ஜன­வரி 29ஆம் திகதி முதல் பெப்­ர­வரி 22 ஆம் திக­தி­வரை பொதுமன்­னிப்பு காலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குவைத் அர­சாங்­கத்­தினால் 2018 ஜன­வரி 29ஆம் திக­தி­முதல் எதிர்­வரும் பெப்­ர­வரி 22ஆம் திக­தி­வரை விசா சட்­டத்தை மீறிய நபர்­க­ளுக்­காக பொது மன்­னிப்பு காலத்தை அந்­நாட்டு உள்­வி­வ­கார அமைச்­சு அறி­வித்துள்­ளது.

இந்த பொது மன்­னிப்பு காலத்தில் சட்­ட­ குவைத்தில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்கள் குறித்த இந்த காலப்­ப­கு­தியில் அதற்­கு­ரிய தண்­டப்­பணம் செலுத்­தாமல், குறிப்­பிட்ட நிறு­வ­னத்தில் இருந்து விசேட அனு­ம­தியை பெற்­றுக்­கொள்­ளாமல் அந்­நாட்டில் இருந்து வெளி­யேற முடியும்.

இவ்­வாறு குவைத்தில் இருந்து வெளி­யே­று­வோ­ருக்கு சட்­ட­ரீ­தி­யி­லாக மீண்டும் குவைத் அந்­நாட்­டுக்கு செல்­வ­தற்கு (வேறு சட்ட ரீதி­யி­லான தடைகள் இல்­லா­விட்டால்) அனு­மதி வழங்கப்­ப­டு­கின்­றது. மேலும் இந்த மன்­னிப்பு காலப்­ப­கு­தியில் தங்­களால் செலுத்­த­வேண்­டிய குறித்த தண்­டப்­பணம் அனைத்­தையும் செலுத்தி, அனு­ம­திக்­கப்­பட்ட விசா பத்­திரம் ஒன்றை பெற்­றுக்­கொண்டு தொடர்ந்து குவைத்தில் தங்­கி­யி­ருப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பிர­யா­ணத்­தடை அல்­லது நீதி­மன்ற தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு காலம் பொருந்­தாது. அவ்­வாறு சட்ட பிரச்­சி­னைகள் இருப்­ப­வர்கள் அருகில் இருக்கும் வதி­விட விவ­கார திணைக்­க­ளத்­திற்கு சென்று தங்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன் குறித்த மன்­னிப்பு காலத்தில் குவைத்தில் இருந்து வெளி­யே­று­வ­தற்கு அனு­ம­தி­வ­ழங்­கப்­பட்­டி­ருந்தும் தொடர்ந்தும் அங்கு தங்கி இருப்­ப­வர்­களை கைது­செய்து வெளி­யேற்­று­வ­தற்கு அந்­நாட்டு அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

இதே­வேளை, குவைத் நாட்டில் சுமார் 15 ஆயிரம் இலங்­கை­யர்கள் சட்ட பூர்­ வ­மான விசா இல்­லாமல் தங்கி இருக்­கின்­றனர். இவ்­வாறு அங்கு தங்கியிருப்பவர்களை அவர்களின் உறவினர்கள் இது தொடர்பாக அறிவுறுத்தி பொது மன்னிப்பு காலத்தில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 8 =

*