இளையோர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்..!!

இளையோர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
நியூசிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது.
குயின்ஸ்டவுனில் நடந்த இதன் காலிறுதியில் இந்திய – பங்களாதேஷ் அணிகள் மோதின.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 266 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 42.1 ஓவர்களில் 134 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் 131 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இளையோர் உலகக்கிண்ண அரையிறுதிக்கு முன்னேறியது.
எதிர்வரும் 30ஆம் திகதி கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் இந்திய – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்திய -– பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு நாடுகளின் தேசிய அணிகள் மோதுகின்ற போட்டிகளில் உள்ள விறுவிறுப்பு இந்தப் போட்டிக்கும் தொற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.