;
Athirady Tamil News

இலஞ்சம் வேண்டினேன் என நிரூபித்தால் பாராளுமன்ற பதவியை விட்டு செல்வேன்- சாள்ஸ் நிர்மலநாதன்..!!

0

இலஞ்சம் வேண்டினேன் என நிரூபித்து காட்டினால் பாராளுமன்ற பதவியை விட்டு விட்டு வீட்டுக்கு செல்வேன் – வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

இலஞ்சம் வேண்டினேன் என நிரூபித்து காட்டினால் பாராளுமன்ற பதவியை விட்டு விட்டு வீட்டுக்கு செல்வேன் – வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.

இலஞ்சம் வேண்டினேன் என நிரூபித்து காட்டினால் நான் பாராளுமன்ற பதவியை விட்டு விட்டு வீட்டுக்கு செல்வேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

26.01.2018 வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தில் நடைபெற்ற வவுனியா தெற்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மருத்துவர் ப.சத்திநாதனை ஆதரித்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றும் போது,

எங்கள் மக்களிற்கு கிடைக்க வேண்டிய தீர்வை இல்லாதொழிக்க ஏங்களுடைய கட்சியை உடைப்பதற்கும் எங்கள் கட்சிமீது பொய்யை சுமத்துகின்றார்கள். அது எவ்வாறெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மகிந்த ராஜபக்சவின் பின்னணியில் பொய்யான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அக்கட்சிக்குள் பிரிவினையை உண்டுபன்னினார். இன்று எங்களது கட்சிக்குள் இருந்த சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றார்கள் என்று கூறுகிறார். அவ்வாறு இலஞ்சம் பெற்றிருந்தால் அதை நிரூபித்து காட்ட வேண்டும்.

ஜீஎல் பீரிசுக்கும் ஆனந்தனுக்கும் தொடர்பிருக்கின்றது. சிவசக்தி ஆனந்தனால் இரண்டு கோடி ரூபாய் வாங்கியுள்ளனர் என்று கூறும் போது தெற்கில் இருந்து மகிந்தவின் ஆலோசகராக இருந்தவரும் மகிந்தவினால் உருவாக்கப்பட்ட புதிய கட்சியின் முக்கிய பிரமுகரான ஜீஎல் பீரிஸ் வழக்கு போட வேண்டும் என்று கூறுகின்றார்.

மேலும் மகிந்த ராஜபக்ச கடற்றொழில் அமைச்சராக இருந்த போது சுரேஸ் பிரமச்சந்திரன் மகிந்தராஜபக்சவின் ஆலோசகராக செயற்பட்டவர். தற்போது கூறப்படும் இரண்டு கோடி ரூபாய் விடயம் தெற்கில் இருந்து வந்துள்ளது. எவ்வாறு கட்சிகளை உடைக்க வேண்டும் என்பது மகிந்த ராஜபக்சவிற்கு கைவந்த கலை. மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் ஒவ்வொருவருடைய நிகழ்ச்சிக்கு பின்னால் தேசிய ரீதியான கட்சிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. எங்களிற்கு பின்னால் எந்த கட்சிகளும் இல்லை எங்களிடம் இருக்கும் ஒரே பலம் மக்கள் பலம் மட்டும்தான்.

புதிதாக இலஞ்சம் வேண்டியுள்ளார் என்று கூறப்டுகின்ற குற்றச்சாட்டுக்களை சொல்பவர்கள் நிரூபித்து காட்டினால் பாராளுமன்ற பதவியை விட்டு விட்டு வீட்டுக்கு செல்வேன் என்று தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 3 =

*