;
Athirady Tamil News

கான்பூர்: கார்-மோட்டார் சைக்கிள் மோதி பயங்கர விபத்து – 3 பேர் பலி..!!

0

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள ஸ்வரூப் நகருக்கு அருகில் இன்று காலை கார்-மோட்டார் சைக்கிள் மோதி பயங்கர விபத்து. அப்பகுதியில் உள்ள நரேந்திர மோகன் பாலத்தில் கார் வேகமாக வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேர் தூக்கி எறியப்பட்டனர். இடித்த வேகத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஏற்கனேவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாமன் திவாரி மற்றும் ஜெயந்த் யாதவின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நபர் யார் என்பது தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 2 =

*