;
Athirady Tamil News

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் தேசிய நல்லிணக்க பொங்கல் விழா..!! (படங்கள்)

0

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் தேசிய நல்லிணக்க பொங்கல் விழா இன்று காலை இடம்பெற்றது.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் கெப்பட்டிக்கொல்லாவ கல்வி வலயம் மற்றும்; வவுனியா தெற்கு வலயமும் இணைந்து நடாத்தும் பொங்கல் விழா வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் ஆரம்ப பாடசாலை அதிபர் திருமதி தி.யுவராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதல் நிகழ்வாக பிரதம விருந்தினர்களிற்கு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். மேலும் சிங்கள தமிழ் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் இரு இன ஆசிரியர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழரின் பாரம்பரிய திருநாளான தைத்திருநாளின் சிறப்பினை சொல்லும் வகையில் பொங்கல் பொங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன் அந்நிகழ்வின் நோக்கம் தொடர்பாகவும் இரு மொழிகளிலும் மாணவர்களிற்கு விளக்கமும் அளிக்கப்பட்டது.

மேலும் கயிறு இழுத்தல் ஒட்ட போட்டி போன்ற மைதான நிகழ்வுகளும், நடனம், நாடகம், பாடல் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஆரம்ப பாடசாலை மாணவர்களிடையே இன நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்கான இந்நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலய உயர் அதிகாரிகள், கெப்பிட்டிகொல்லாவ கல்வி வயல உயர் அதிகாரிகள். ஆசிரியர்கள், கெப்பிட்டிகொல்லாவ, வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 1 =

*