கம்போடியா-இந்தியா இடையே 4 ஒப்பந்தங்கள்: மோடி முன்னிலையில் கையெழுத்து..!!

கம்போடிய பிரதமர் ஹன் சென் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியாவிற்கு வந்தார். அவருக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கம்போடிய பிரதமர், ஐதராபாத் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் இரு நாட்டின் பிரதமர்களின் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளையும் சேர்ந்த பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மோடி பேசுகையில், கம்போடியா மற்றும் இந்தியாவின் கூட்டு கலாச்சார பாரம்பரியத்தின் அங்கமாக அங்கோர் வாட் கோவிலின் பாதுகாப்பு பணிகள் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், வருங்காலத்தில் கம்போடியாவுடனான நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார்