;
Athirady Tamil News

ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் கைதான சவுதி இளவரசர் அல்-வாலித் விடுதலை..!!

0

சவுதி அரேபியா நாட்டில் ஊழல் புகாரில் கைதான 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தொழில் அதிபர்கள் உட்பட சுமார் 350 பேர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நான்காம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் ரியாத் நகரில் ஐந்து மற்றும் ஏழு நட்சத்திர ஓட்டல்களில் சொகுசு கைதிகளாக வைக்கப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கை, அந்நாட்டின் ஆட்சிக்கட்டில் மீதான குடும்ப அரசியலால் நடத்தப்படும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸின் சூழ்ச்சி என சர்ச்சை கிளம்பியது.

இதற்கிடையில், கைதானவர்களில் சிலர் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டனர். முறைகேடாக சம்பாதித்த பணத்தை அரசு கருவூலத்துக்கு செலுத்தவும் அவர்கள் முன்வந்தனர். இதன் மூலம் மட்டும் அரசுக்கு சுமார் 100 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருவாய் கிடைக்கலாம் என சவுதி ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டின் மிகப்பெரிய செல்வந்தராக கருதப்படும் இளவரசர் அல்-வாலித் பின் தலால் மூன்று மாதங்களுக்கு பின்னர் ரிட்ஸ்-கார்ல்ட்டன் சொகுசு ஓட்டலில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் அல்-வாலித்தின் நெருங்கிய நண்பர் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள நிலையில் அவர் என்ன நிபந்தனையின்கீழ் விடுதலை செய்யப்பட்டார்? என்ற விபரத்தை தெரிவிக்க சவுதி அரேபியா தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*