;
Athirady Tamil News

சிலோன் மனோகரின் ஆத்மா சாந்தியடைய திருப்பலி ஒப்புக்கொடுப்பு..!! (படங்கள்)

0

புகழ் பெற்ற இலங்கையின் முன்னணிப் பாடகர் சிலோன் மனோகரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அவரது குடும்பத்தினரால் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ, சிரிபுர பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மலையகத்தில் பொகவந்தலாவ டின்சின் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர் பொப்பிசைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டார். சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களில் தமது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர் இலங்கையில் முன்னணிப் பாடகர்களின் தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார். இலங்கையில் பொப்பிசைப் பாடல்கள் பலவற்றை பாடியது மாத்திரமல்லாது, இந்தியாவில் தமிழ் சினிமாவிலும் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இலங்கையில் பொப்பிசைச் சக்கரவத்தி என பலராலும் அழைக்கப்பட்ட மனோகரன், தமிழ், சிங்களம், மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட பல மொழிகளில் பாடி ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*