;
Athirady Tamil News

விபத்தில் காயமடைந்தவர்களிற்கு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை இல்லை – அனுராதபுரத்திற்கு அனுப்பி வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியா ஒமந்தை பகுதியில் இன்று (27) மாலை 5.00 மணிக்கு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் இரண்டு மணித்தியாலத்திற்கு எதுவித மருத்துவ உதவியும் அளிக்கப்படாமல் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அம்மபுலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா ஒமந்தை பகுதியில் நாம்பன் குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிளின் பின் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயனித்த நாம்பன்குளத்தை சேர்ந்த ரவீந்திரன் சஜீவன் (வயது 19) கனகசிங்கம் புவிதரன் (வயது 17) ஆகிய இரு இளைஞர்களும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் போது படுகாயமடைந்த இருவரிற்கும் ஸ்கான் பரிசோதனை செய்ய வேன்டிய நிலை ஏற்பட்டது. மேலும் ஸ்கான் பிரிவினர் வேலைநிறுத்தம் காரணமாக எதுவித சிகிச்சையும் மேற்கொள்ள முடியாது என கைவிரித்த வைத்தியசாலை நிர்வாகம் இரண்டு மணித்தியாலயத்தின் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் காயம்பட்டவர்களை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வைத்தியசாலையின் இந்நடவடிக்க காரணமாக விபத்தில் படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினர் முரண்பட்டதுடன் ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கையில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் எமது பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை நடவடிக்ககளை மந்தகதியில் மேற்கொண்டதுடன் ஊழியர்கள் ஸ்ரைக் செய்வதாக கூறி இரண்டு மணித்தியாலங்களின் பின் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பாக பேரூந்தை தடுத்து வைத்து ஓமந்தை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டபோது பேரூந்தின் சாரதி குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 6 =

*