;
Athirady Tamil News

திரிபுரா, மேகாலயா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!!

0

திரிபுரா மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 18-ந் தேதியும், இதேபோல் 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் அடுத்த மாதம் 27-ந் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் திரிபுரா மாநிலத்தில் 59 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும், மேகாலயா மாநிலத்தில் 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

மேகாலயா மாநிலத்தின் ஷாங்சக் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான முகுல் சங்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

மேற்கண்ட தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 1 =

*