;
Athirady Tamil News

ஹட்டனில் பிரதமர் தலைமையில் பிரசாரக் கூட்டம்…!! (படங்கள்)

0

ஹட்டனில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டமொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் ‘யானை’ சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாகவே இந்தக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டார்.

இதில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். திலகராஜ், கே.கே. பியதாஸ, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*