;
Athirady Tamil News

பத்மஸ்ரீ விருதை வாங்க மடாதிபதி சித்தேஸ்வரா சுவாமி மறுப்பு – பிரதமருக்கு விளக்க கடிதம்..!!

0

குடியரசு தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கர்நாடகத்தை சேர்ந்த மடாதிபதி சித்தேஸ்வரா சுவாமி உள்பட 9 பேருக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், மடாதிபதி சித்தேஸ்வரா சுவாமி தனக்கு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்துள்ளார்.

மேலும் தனது பத்மஸ்ரீ விருது வேண்டாம் என்று கூறி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை பிரதமரிடம் வழங்கிவிடும்படி பசவராஜ் பட்டீல் எம்.பி.யிடம் மடாதிபதி சித்தேஸ்வரா சுவாமி கொடுத்துள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

“எனது சமூக சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு விருது மீதும் ஆசை இல்லை. இதற்கு முன்பு எனக்கு வழங்கப்பட்ட எந்த விருதையும் நான் வாங்கியதில்லை.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கர்நாடக பல்கலைக்கழகம் எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்தது. அதையும் நான் ஏற்கவில்லை. அதனால் பத்மஸ்ரீ விருது எனக்கு வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 7 =

*