;
Athirady Tamil News

பௌசர்களைக் கண்காணிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம்…!!

0

எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்ட போதிலும் மண்ணெண்ணெய் கலந்து எரிபொருளுடன் விற்பனை செய்யும் மாபியா குழுவை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதாக கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறான சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் திறக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொலன்னாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு கட்டமைப்பின் செயற்பாடுகளை பார்வையிட்ட போதே அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டார்.

தற்போது இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விசேட முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

பௌசர்களைக் கண்காணிப்பதற்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பயன்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கும் மானியத்தை எவரும் கொள்ளையிட இடமளிக்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + six =

*