;
Athirady Tamil News

மத்திய அரசு பணியிடங்களில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு..!!

0

மத்திய அரசு பணியிடங்களில் கற்றல் குறைபாடு கொண்டவர்கள், மனவளம் சார்ந்த நோய்கள் மற்றும் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியிடங்களில் குரூப் ஏ,பி,சி, பிரிவுகளின்கீழ் இதற்கு முன்னர் 3 சதவீதமாக இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு இனி 4 சதவீதமாக உயர்த்தப்படும் அரசு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு சார்ந்த துறைகளுக்கான வேலைவாய்ப்பில் ஒரு சதவீத இடம் பார்வையிழந்தோர், பார்வை குறைபாடு கொண்டவர்கள், செவித்திறன் அற்றவர்கள் அல்லது கேட்கும் திறன் குறைவாக உடையவர்கள், நடமாட்டத்தில் சிரமத்துக்குள்ளானவர்கள், குணமடைந்த தொழுநோயாளிகள் மற்றும் ஆசிட் வீச்சில் ஒதுக்க வேண்டும்.

கற்றல் குறைபாடு கொண்டவர்கள், மனவளம் சார்ந்த நோய்கள் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த 4 சதவீதத்தில் தனியாக ஒரு சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என மத்திய அரசின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், இந்த முடிவு கடந்த 2016-ம் கொண்டு வரப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி எடுக்கப்பட்டதாகவும் அந்த உயரதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*